மூதூர் -ஹைரியாநகர் பிரதேசத்தில் இலவச இரத்த பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.
மூதூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பீ.டி.எம்.பைஸரின் வேண்டுகோளுக்கிணங்க நாளை (06) இடம்பெறவுள்ள இலவச மருத்துவ முகாமை முன்னிட்டு இவ் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ் இலவச வைத்திய முகாமில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வைத்திய சேவை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த இலவச வைத்திய முகாமினை இஸ்லாமிக் அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/free-blood-donation-1780655644

