முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய்! எழுத்து மூலம் வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம்

 புதிய இணைப்பு

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த தாயிற்கு நீதி கோரி போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர்
க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய
போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வடமாகாண சுகாதார
சேவைகள் பணிப்பாளர்,மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட
விசேட குழு பிரதிநிதிகள், அடங்களாக உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும்
உறவினர்கள், சட்டத்தரணிகள் ,மத தலைவர்களை உள்ளடக்கி விசேட கலந்துரையாடல்
இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக
இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது குறித்த பெண் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டது முதல் அவர் உயிரிழக்கும் வரை அங்கு நிகழ்ந்த சம்பவங்கள்
குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.

 உரிய தீர்வு 

மேலும் இம்மரணங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்

.இதன் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் எழுத்து மூலம் தமது கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு குறித்த
குழுவிடம் கோரிக்கை வைத்தனர்.

மன்னாரில் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய்! எழுத்து மூலம் வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம் | Justice Sought For Young Mother S Death In Mannar

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின்
இரண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும்,மாகாண பணிப்பாளர்
தனது விசாரணை குழுவை நியமித்து மூன்று நாட்களில் தமது விசாரணையை
முடிப்பதாகவும்,வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இந்த விடயங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உள்ளடங்களாக
அனைவருக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாகாண பணிப்பாளர் எழுத்து மூலம்
உத்தரவாதம் வழங்கினார்.இந்த நிலையில் குறித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு உயிரிழந்த பெண்ணின் தாய்
மற்றும் உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.

எனினும் இரண்டு அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் குறித்த
உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மக்களை திசை திருப்பி தமது
அரசியல் நாடகத்தை அரங்கேற்றினர்.

இதனால் அங்கு மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

இந்த
நிலையில் காவல்துறையினர்,விசேட அதிரடிப்படை மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினர் இணைந்து
வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலவந்தமாக
வெளியேற்றினர்.

இதனால் சில மணி நேரம் மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியூடான போக்குவரத்து
பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்
மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் (Mannar) பொது
வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம் பெற்று வருகின்றது.

குறித்த போராட்டமானது, இன்று (20) மாலை 4.30 மணியிலிருந்து இடம் பெற்று வருகின்றது.

தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது
செய்யப்படவேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்படவேண்டும் போன்ற பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம் பெற்று வந்துள்ளது.

 கலகம் அடக்கும் காவல்துறையினர்

அதனை தொடர்ந்து
போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில்
வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

மன்னாரில் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய்! எழுத்து மூலம் வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம் | Justice Sought For Young Mother S Death In Mannar

இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில்
கலகம் அடக்கும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான
குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை
ஏற்படவில்லை.

கொட்டும் மழையில்

போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கும்
முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் வைத்தியசாலையில் இறந்த இளம் தாய்! எழுத்து மூலம் வாக்குறுதியின் பின் கைவிடப்பட்ட போராட்டம் | Justice Sought For Young Mother S Death In Mannar

இதேவேளை,மன்னார் பொது வைத்தியசாலையில் (Mannar Hospital) நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேனுஜா திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (18) பிரசவத்திற்காக மன்னார் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது பிள்ளையும் தாயும் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/justice-sought-for-young-mother-s-death-in-mannar-1732112061?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.