முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கலால் வரி ஆணையரின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கண்டனப் போராட்டம்!

கலால் வரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜகிரியவில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக சமூக ஆர்வலர்கள் குழுவினர் கண்டனப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் போது, சுயதொழில் சங்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான பிரதீப் சார்ல்ஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

கலால் வரி ஆணையாளர் பிரேமரத்ன, அண்மையில் சொகுசு ‘வெசல்’ ரக மோட்டார் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும், இதற்கான நிதி அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து பின்னால் உள்ள லஞ்ச ஊழல் விபரங்களுடன் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சோளத்தைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டிய மதுபானங்களை, வஜிர குணசேகரவின் ‘வி&ஏ’ நிறுவனம் அதிக லாபத்தை நோக்கமாகக் கொண்டு சர்க்கரையைப் பயன்படுத்தி தயாரித்து வருகின்றார். இந்த மோசடிகளை மூடிமறைக்கவே கலால் வரி ஆணையாளர் அவருக்குத் துணை போகிறார். 

மேலும், தற்போதைய நிதி அமைச்சரின் தாயார் மறைந்த போது, அதற்கான அனைத்து செலவுகளையும் இந்த மதுபான நிறுவன அதிபர் வஜிர குணசேகரவே ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரையும் இவர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. 

இந்த ஊழல் நெட்வொர்க்கை அம்பலப்படுத்த, பிரதி நிதி அமைச்சர், கலால் வரி ஆணையாளர் மற்றும் வஜிர குணசேகர ஆகிய மூவரின் தொலைபேசி அழைப்பு விபரங்களை  ஜனாதிபதி உடனடியாகப் பெற்று விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரிய அவர், இந்த ஒட்டுமொத்த லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறையான ஆவணங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/protest-against-the-corruption-allegations-against-the-excise-commissioner-1780923148

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.