முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கால்வாயில் தவறி விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கால்வாயில் தவறி விழுந்த குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி,நேற்று (26) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெலிகந்த ஜயவிக்ரமகம மஹாவலி சிங்கபுர இசுருவைச் சேர்ந்த ஜயநாத் பண்டார என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தவறி விழுந்த குழந்தை

வெலிகந்த பிரதேசத்தில் கால்வாயொன்றில் தவறி விழுந்த குழந்தையானது சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

கால்வாயில் தவறி விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு! | A Child Died After Falling Into The Canal

குழந்தை வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த கால்வாயில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை

இதனைக் கண்ட வெலிகந்த பிரதேசத்தில் உள்ள தனியார் நெல் ஆலையொன்றின் ஊழியர் உட்பட அங்குள்ள சிலரால், குழந்தை மீட்கப்பட்டு வெலிகந்த வைத்தியசாலைக்குகொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

கால்வாயில் தவறி விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு! | A Child Died After Falling Into The Canal

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், குழந்தையின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/a-child-died-after-falling-into-the-canal-1714210963

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்