யாழ்ப்பாணத்தில்(Jaffna) ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ். மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் இன்று(09.06.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு
மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதன்போது கைது செய்யப்பட்ட 25 ,24 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணையின் பின்னர்
நாளை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/four-arrested-with-drugs-and-sword-in-jaffna-1717951355

