திருகோணமலை (Trincomalee) – அன்புவழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், 8 கிலோ
கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (3)
இரவு, அவரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கேரள கஞ்சா கடத்தப்படுவதாக எங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த
இடத்துக்குச் சென்று, சந்தேக நபரை சோதனை செய்த போது, அவரிடமிருந்து
8Kg கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.