முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னமரவாடி மக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு!

திருகோணமலை, தென்னமரவாடி கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்துப் பிரச்சினைக்கு இன்று (18) நிலையான தீர்வு காணப்பட்டுள்ளது.

தென்னமரவாடியில் இருந்து புல்மோட்டைக்கான புதிய தனியார் பஸ் போக்குவரத்து சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

​வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வழி விவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்நடவடிக்கையை முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

​கிழக்கு மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் இந்த விசேட போக்குவரத்து திட்டம் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

​இன்று நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுடன், கிழக்கு மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கித்சிறி நவரத்ன, பிரதேச பிரஜா சக்தி தலைவர் மற்றும் அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

​இதன் போது பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 

“மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நலன்கள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. தென்னமரவாடி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இப்போக்குவரத்து வசதி மூலம், அப்பகுதி மக்கள் தங்களது அன்றாடப் பொருளாதார, கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான பயணங்களின் போது எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு இனிமேல் சுலபமாகத் தீர்வு காண முடியும்.” என்றார்.

புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னமரவாடி பகுதி பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

புல்மோட்டை நகருக்குச் செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால், இத்தனை காலமும் மாணவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் அவதிக்குள்ளாகியதாக மக்கள் தெரிவித்தனர்.

 இது காலம் வரைக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக பணம் செலவழித்து வந்த நிலையில், இந்த புதிய பஸ் சேவை தங்களது பொருளாதார சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

தங்களின் நீண்டகால அவல நிலையை உணர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதி அமைச்சர், கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

​இப்புதிய பஸ் சேவையின் மூலம் தென்னமரவாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: https://samugammedia.com/a-solution-to-the-long-standing-transportation-problem-of-the-people-of-thennamaravadi-1781767188

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.