பலமான தமிழ் கட்சி ஒன்று இன்று பலமிழந்து பரிதாப நிலைக்கு செல்வதற்கு தனி ஒருவரின் செயற்பாடே காரணமாகும்.நான் அந்த கட்சியிலிருந்து வெளியேறுவதற்கும் அவரே காரணம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்(c.v. vigneswaran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்(jaffna) இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனி ஒருவரே காரணம்
இப்பொழுதும் அந்த கட்சியை பிரிக்க முயல்வதும் அவர்தான்.குறிப்பிட்ட சிலர் இன்னொரு கட்சியை தொடங்கப்போவதாக இருந்தால் அதை கேட்டு ஆச்சரியப்படப்போவது இல்லை.
தனிப்பட்ட ரீதியில் சந்திப்பது பிழையான விடயம்
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஊடாக ஒரு பொது வேட்பாளரை நியமித்ததன் பின்னர் வேறு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கலந்துரையாட அழைத்தால் பொது கட்டமைப்புடன் சென்றே சந்திக்க வேண்டும்.
எனவே இவ்வாறான அழைப்புக்களை ஏற்று தனிப்பட்ட ரீதியில் சந்திப்பது பிழையான விடயம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.