முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் டெங்கு பரவலுக்கு பிரதான காரணம் ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு – நிபுணர் எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக ஏடிஸ் ஈஜிப்டை (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) எனப்படும் இரண்டு நுளம்பு இனங்கள் செயற்படுகின்றன என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி தெரிவித்துள்ளார்.

அவற்றில், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பே டெங்கு நோயைப் பரப்பும் பிரதான நோய்க்கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் டெங்கு தொற்று அதிகரிக்கும் காலப்பகுதிகளுக்கு முன்னதாகவே இந்த நுளம்பு இனத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பிற்கு தனித்துவமான இரத்தம் உறியும் இயல்பு காணப்படுவதாகவும், பொதுவாக ஒரு பெண் நுளம்பு தனது வாழ்க்கைச் சுழற்சிக்குத் தேவையான இரத்தத்தை ஒரே நபரிடமிருந்து பெற்றுக்கொள்வதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எனினும், இந்த நுளம்பு குறுகிய காலப்பகுதிக்குள் பல நபர்களிடமிருந்து இரத்தம் உறிஞ்சும் தன்மையைக் கொண்டிருப்பதால், டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட நுளம்புகள் ஒரே நேரத்தில் பலருக்கு நோயை பரப்பும் அபாயம் அதிகரிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

இதனால், டெங்கு கட்டுப்பாட்டிற்காக நுளம்புகளின் இனப்பெருக்க இடங்களை அழிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி வலியுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/the-main-reason-for-the-spread-of-dengue-in-sri-lanka-is-the-aedes-aegypti-mosquito–expert-warning-1781764814

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்