முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜூன் 24, 25-ல் மழை அதிகரிக்கும் – ஜூலை முதல் எல் நினோ தாக்கத்தால் வறட்சி!

இலங்கையில் நானை 24, நாளைமறுதினம்  25ஆம் திகதிகளில் மழையின் அளவு ஓரளவுக்கு அதிகரிக்கும் என்றும், எனினும் ஜூன் மாத இறுதியின் பின்னரே தற்போதைய காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டின் எதிர்காலக் காலநிலை மற்றும் ‘எல் நினோ’ (El Nino) தாக்கங்கள் குறித்துப் பின்வரும் முக்கிய விபரங்களை வெளியிட்டார்:

தென்மேற்கு பருவக்காற்று ஓட்டம் குறைவடைந்துள்ளதால், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழையளவு மற்றும் மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளது. எனினும், இம்மாத இறுதி வரை வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

உலகளாவிய ரீதியில் பலவீனமாக உள்ள எல் நினோ நிலைமை, வரும் மாதங்களில் வலுவடையக்கூடும். இதன் மறைமுகத் தாக்கம் தற்போது இலங்கையில் ஆரம்பித்துள்ளது.இன்னும் ஓரிரு வாரங்களில் (ஜூலை மாதத்தில்) மழைப்பொழிவு படிப்படியாகக் குறையும். எல் நினோ தாக்கத்தினால் ஜூலை இறுதி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைப்பொழிவு பெருமளவு குறைந்து வறட்சியான காலநிலை நிலவும்.

எல் நினோவினால் மழை குறையும் என்று மட்டும் கூற முடியாது. ஜூலை, ஆகஸ்ட்டில் வறட்சி நிலவினாலும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விடக் கூடுதலான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

நடப்பு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர், எல் நினோவின் நேரடிப் பாதிப்பாக அடுத்த வருடத்தின் (2027) ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கடுமையான வறட்சியும், அதிக வெப்பநிலையும் நிலவக்கூடும். இது நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/rain-will-increase-on-june-24-and-25–from-july-drought-due-to-el-nio-1782182489

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.