முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

TIN பெற அவசரம் இல்லை: நீண்ட வரிசை குறித்து யாழ். அரச அதிபர் விளக்கம்

யாழ்ப்பாணத்தில் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்பாக, யாழ்ப்பாண அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார்.

காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக நிலவும் நெரிசலைத் தொடர்ந்து, அரச அதிபர் நேற்று பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து பொதுமக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

TIN இலக்கத்தை ஜூன் 30ஆம் திகதிக்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்தக் காலக்கெடுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், TIN பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எந்தவித கட்டணமும் அறவிடுவதில்லை என்றும், இதற்காக பணம் பெறுவதோ அல்லது வழங்குவதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே TIN பதிவு செய்யப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இன்னும் பதிவு செய்யாதவர்கள் www.ird.gov.lk இணையத்தளம் மூலமாகவோ அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாகவோ பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக பதிவு செய்பவர்களுக்கான TIN சான்றிதழ்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், மேலதிக தகவல்களுக்கு 021 221 7333 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, TIN தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற பதற்றம் அல்லது பீதியடைய வேண்டாம் என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source: https://samugammedia.com/no-rush-to-get-a-tin-jaffna-government-chief-explains-about-the-long-queues-1782447809

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.