நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவி விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
ஆனால் அவருடன் பேச பலமுறை முயற்சித்தேன், பேச முடியவில்லை, விவாகரத்து முடிவு அவராக எடுத்தது என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இது ஒருபுறம் இருக்க ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்துக்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவரை தான் என ஒரு செய்தி பரவி பெரிய சர்ச்சையாக மாறியது.

கெனிஷா பேட்டி
இந்நிலையில் தற்போது கெனிஷா ஒரு பிரபல தமிழ் நாளிதழுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் “ஜெயம் ரவிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு என்பது professional ஆக மட்டும் தான். அவர் என்னுடைய நண்பர், client அவ்வளவு தான்” என கூறி இருக்கிறார்.
“அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டு தான் என்னிடம் வந்தார்” என கெனிஷா கூறி இருக்கிறார்.
“இது உங்க வீட்டு பிரச்சனை இல்லை, வேறொருவரின் குடும்ப பிரச்சனை. அதில் இருந்து விலகி இருங்கள். இரண்டாவது – என்னை இதில் இழுக்காதீர்கள். எனக்கு வேலை இருக்கிறது, அதற்கு நேரம் இல்லை” என கெனிஷா பிரான்சிஸ் கூறி இருக்கிறார்.

Source: https://cineulagam.com/article/kenishaa-francis-reacts-to-rumour-about-jayam-ravi-1727173542

