முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹல்கஹவத்த கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – பொலிஸார் விசாரணை

சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (27) சஹஸ்புர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவர் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர் சுமார் 5 அடி 4 அங்குலம் உயரமுடையவராகவும், நரைத்த தலைமுடியைக் கொண்டவராகவும் இருந்துள்ளார். அவர் உயிரிழந்த போது கருப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் மற்றும் உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/unidentified-mans-body-recovered-from-halkhavatha-canal–police-investigation-1782626448

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்