முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறை காட்டில் மரப்பொந்திற்குள் புலிகளின் ‘ஸ்னைப்பர்’ துப்பாக்கி மீட்பு!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு, பக்மிட்டியா காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று  மாலை மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினர் வழமை போல் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இத்தேடுதல் நடத்தப்பட்டது.

காட்டுப்பகுதியில் உள்ள மரப்பொந்து ஒன்றில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இப்பகுதியானது கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்ததுடன், அவர்கள் கெரில்லா போர் உத்திகளுக்காக இவ்வாறான ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆயுதங்கள் நீண்டகாலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் தற்போது துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர்  தெரிவித்துள்ளார்.

ஸ்னைப்பர் துப்பாக்கி – 01

தொலைநோக்கி (Scope) – 01

ரவைக்கூடு (Magazine) – 01

தோட்டாக்கள் (Bullets) – 07 மீட்கப்பட்டன

மீட்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரால் 

தற்போது தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Source: https://samugammedia.com/sniper-rifle-recovered-from-tigers-in-a-tree-trunk-in-amparai-forest-1782833262

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்