யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி -புத்தங்கல எல்லைப்பகுதியில் இன்று (1) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வேளாண்மை பயிர்ச்செய்கை மேற்கொண்டு மரம் ஒன்றில் பரண் அமைத்து யானை காவலில் ஈடுபட்ட குடும்பஸ்தரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளானார்.
இவ்வாறு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர் 42 வயது மதிக்கத்தகக் சுப்ரமணியம் கோவீந்தன் என அடையளாம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி காயமடைந்த குடும்பஸ்தர் யானை காவலுக்காக சென்ற நிலையில் இவ்வனர்த்தத்திற்கு முகம் கொடுத்தள்ளார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

