கடைகளில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளரால் முன்மொழியப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, எதிர்காலத்தில் கடைகளில் பொலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்படாது.
குறைந்தபட்ச விலை
பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளின் மூலம் சுற்றுச்சூழலுக்குள் நுழையும் பொலித்தீன் பைகளை குறைப்பதே இதன் நோக்கம் ஆகும்.
இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக நிதி அமைச்சகம் மற்றும் நுகர்வோர் விவகார ஆணையம் உட்பட பல அமைச்சகங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.

பொலித்தீன் பைகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும் தற்போதைய சட்ட விதி போதுமானதாக இல்லை என்றும், இந்த திட்டம் உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

