Courtesy: Sivaa Mayuri
இலஞ்சம் கோரும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் வைத்து, மற்றுமொரு கைதியால் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்த மற்றுமொரு கைதியால் தாக்கப்பட்ட நிலையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர்
குறித்த கைதி கூரிய ஆயுதம் ஒன்றினால் பரிசோதகரின் முகத்தில், தாக்கி காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தாக்கப்பட்ட அதிகாரி அண்மையிலேயே இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/a-prisoner-stabbed-police-officer-while-on-remand-1720710495

