இலங்கையில் (Sri Lanka) உள்ள கெசினோ சூது விளையாட்டுக்களில் முதலீடு செய்யுமாறு ஒரு
தொழிலதிபரை ஊக்கப்படுத்தி, அவரிடம் இருந்து 25 கோடி ரூபாயை ஏமாற்றியதாக
கூறப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்,
இந்தியாவின் பெங்களூரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெங்களூருவில் உள்ள பசவேஸ்வர நகர் பொலிஸாரே குற்றம் சுமத்தப்பட்டவரை கைது
செய்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கு
குற்றம் சுமத்தப்பட்டவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள
ஒருவரின் தந்தை என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அவருடைய மகன் இலங்கையில் ஒளிந்திருப்பதாக பெங்களூர் பொலிஸார்
சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விவேக் பி ஹெக்டே என்பவரிடம் இருந்து 2023 பெப்ரவரி 7, முதல் 2025 பெப்ரவரி
4ஆம் திகதி வரை இந்த ஏமாற்று சம்பவம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

