முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறையில் போதைப்பொருள் கும்பலை துரத்திச் சென்று கைது செய்த பொலிஸ் – பொதுமக்கள் பாராட்டு

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை துரத்திச் சென்று கைது செய்த பொலிஸ் சிறப்பு நடவடிக்கை ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (4)  சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றை மையமாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அந்த வீட்டின் அருகிலிருந்து திடீரென காரில் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான குழு உடனடியாக துரத்திச் சென்றுள்ளது.

தப்பிச் சென்றவர்களுக்கு உதவியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றொரு சந்தேக நபரும் வழிகாட்டி ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

தப்பிச் சென்ற காரை பொலிஸார் சாய்ந்தமருது பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன் போது காரில் இருந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன், ஹெரோயின் 15 கிராம் 370 மில்லி கிராம், சொகுசு கார், மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசிகள், பணம் மற்றும் வங்கி அட்டைகள் உள்ளிட்ட பல சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது 32 ,33, 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் தரப்பின் தகவலின்படி, சோதனை தொடங்கிய வீடு ஏற்கனவே கண்காணிப்பில் இருந்ததாகவும், அங்கிருந்து போதைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையில் தடயவியல் பிரிவு, மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகள் இணைந்து செயல்பட்டன.

கிழக்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரின் பணிப்புரை மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதமும் நிந்தவூர் பகுதியில் 23 வயது பெண் ஒருவர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய கைது நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அதிகரித்துள்ளதுடன், பொலிஸ் துறையின் தீவிர நடவடிக்கைகளுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

இக்கைது நடவடிக்கையினால் அந்த ஊர் மக்கள் இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவினை  தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Source: https://samugammedia.com/police-chased-and-arrested-a-drug-gang-in-ambaram–appreciated-by-the-public-1783233131

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.