முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியா கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவராக கருப்பின பெண்

பிரித்தானியாவின் (UK) கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் (Kemi Badenoch) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக் பெற்றுள்ளார்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak)  தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.

கன்சர்வேட்டிவ் கட்சி 

அதே சமயம், தொழிலாளர்கள் கட்சி 412 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதன் மூலம் பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது.

பிரித்தானியா கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவராக கருப்பின பெண் | Kemi Badenoch Becomes New Leader Uk Conservatives

அதுமட்டுமின்றி, 1832-ம் ஆண்டுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்வி இதுவாகும்.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் ரிஷி சுனக் பதவி விலகினார்.

இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை தோற்கடித்து, கெமி படேனாக் வெற்றி பெற்றுள்ளார்.

கருப்பின பெண்

பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான அரசின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கொள்கைகள் மீது கெமி படேனாக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியா கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவராக கருப்பின பெண் | Kemi Badenoch Becomes New Leader Uk Conservatives

அதே சமயம், கன்சர்வேடிவ் கட்சி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வரும் சூழலில், கட்சியின் நற்பெயரை மீட்டெடுத்து 2029 நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிப்பது கெமி படேனாக்கிற்கு பெரும் சவாலான பணியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.