முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு
பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கமும் அரச அதிகாரிகளும் முன்வரவேண்டும் என
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன்
தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று
(16.06.2024) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற வேளை இ,டம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொழில்வாய்ப்புகள்

“நாங்கள் எமது வேலைவாய்ப்பு உரிமையினையே எதிர்பார்க்கின்றோம்.அதனை நாங்கள்
போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைமைக்கு எங்களை தள்ளவேண்டாம்.

/gov-solve-problem-unemployed-graduates-batticaloa

இன்று வேலையற்ற
நிலையில் நாங்கள் பட்டங்களை பூர்த்தி செய்துவிட்டு வீடுகளில் இருப்பதனால்
பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டதாரிகள்
தொழில்வாய்ப்புகளில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.இங்கு ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல், கோவிட் உட்பட
பல்வேறு காரணங்களினால் தமது பட்டக்கல்வியை காலம் தாழ்த்தி பூர்த்தி செய்த
மாணவர்களும் இன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள்

எங்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு எமக்கான வேலைவாய்ப்பினை
உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும் உரிய அரசியல்வாதிகளும்
முன்வரவேண்டும்.

/gov-solve-problem-unemployed-graduates-batticaloa

எதிர்காலத்தில் எமக்கான
வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கே எமது ஆதரவு இருக்கும்.இன்றைய அரசு எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துமானால்
அவர்களுக்கான ஆதரவும் இருக்கும்.

மேலும், பெண்கள் பெரும் சிரமங்களிற்கு மத்தியிலேயே தமது பட்டக்கல்வியை
பூர்த்தி செய்த நிலையிலும் வேலைவாய்ப்புகள் பெறமுடியாத நிலையில் தனியார் வேலைவாய்ப்பினை தேடிச்சென்றால்
பட்டபடிப்பினை பூர்த்தி செய்த காரணத்தினால் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு
முன்வராத நிலையே காணப்படுவதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/gov-solve-problem-unemployed-graduates-batticaloa-1718603910

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.