ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒரே கொள்கைகளை பின்பற்றி வருவதாக நாடாளுமன்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மூன்று கட்சியின் வேட்பாளர்களும் தனித் தனியாக தேர்தலில் போட்டியிடுவது வளங்களை விரயமாக்கும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மூன்று கட்சிகளின் பெயர்களை ஒன்றிணைத்து ஐக்கிய சமாதான முன்னணி என பெயர் சூட்டி ஒரு வேட்பாளரை நியமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று கட்சிகளினதும் கொள்கை ஒரே விதமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மூவரும் ஒரே கரட் கிழங்கை மூன்று விதமாக சமைத்து பரிமாற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.