தற்போது மிஹிந்தல வழிபாட்டு தளத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே பாதுகாப்பு வழங்குவதாகவும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி பூஜ்ய வளவ ஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பாதுகாப்பு மாத்திரம் போதுமானதல்ல என பல தடவைகள் அரசாங்க அதிகாரிகள் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
இந்த விடயத்தில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேரரை சந்திக்க வந்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/requesting-army-protection-for-mahindra-vihara-1718586952

