புதிய இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அதிகாரிகளால் அவரது கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்பட்டுள்ளது
அத்தோடு, தீர்ப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (01) மேன்முறையீடு செய்யவிருப்பதாக ஹிருணிக்காவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra) 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர் ஒருவரை டிபெண்டரில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு மனு
2016 டிசம்பரில், தெமட்டகொட பிரதேசத்தில் தமது டிஃபென்டர் காரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக காவல்துறையினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/WE9b5u2I-7w