கொழும்பு பங்குச் சந்தையின் (Colombo Stock Exchange) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (08.04.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 467.26 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,127.71 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 2.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் (07.04.2025) கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், காலை 9.51 மணியளவில் தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.
வர்த்தகம் இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சூட்டெண் 639.01 புள்ளிகள் குறைந்து 14,734.34 புள்ளிகளாகவும், S&P SL20 விலைச் சூட்டெண் 240.45 புள்ளிகள் குறைந்து 4,292.90 புள்ளிகளாகவும் பதவாகியிருந்தன.
இது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண்ணுடன் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது முறையே 5.30% மற்றும் 4.16% சரிவைக் குறிக்கிறது.
you may like this
https://www.youtube.com/embed/sC5fPyTdsaQ