முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி: சாதித்தது தெல்லிப்பழை மகாஜனா

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்திய 18 வயது பெண்கள்
அணிகளுக்கிடையில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை
மகாஜனக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாம்பியனாகி பாடசாலைக்குக்கும் யாழ்.மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்றைய தினம்(07) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
இறுதி போட்டியில் குருணாகல் மலியதேவ பெண்கள் மகளிர் கல்லூரியை எதிர்கொண்ட
மகாஜனா 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தேசியமட்ட சாம்பியனாகியுள்ளது

இரண்டாம் பாதியில் கலக்கிய மகாஜனா வீராங்கனைகள்

 போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் எதையும் போடவில்லை இரண்டாம்
பாதியில் மகாஜனா கல்லூரி பெண்கள் அணி இரண்டு கோல்களை போட்டு இந்த தொடரின்
சம்பியன் ஆகியது

தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி: சாதித்தது தெல்லிப்பழை மகாஜனா | Mahajana Champions In National Level Football

இப்போட்டியில் இரண்டாம் பாதியில் மகாஜனா கல்லூரி வீராங்கனை J.கல்கிசா முதல்
கோலையும், அடுத்த கோலை ஆன்ரிவிஸ்சனா போட்டார்

சிறந்த கோல்காப்பாளர்,தொடரின் வீராங்கனையும் அவர்களே 

ஏற்கனவே நடைபெற்ற பொலநறுவை றோயல் கல்லூரிக்கு எதிரான
போட்டியில் J. கல்கிசா மூன்று கோல்களை தொடர்ந்து போட்டு , ஹட்ரிக் கோல்களை
போட்டு அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேறச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது

தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி: சாதித்தது தெல்லிப்பழை மகாஜனா | Mahajana Champions In National Level Football

இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக மகாஜன கல்லூரியை சேர்ந்த ஆன்ரிவிஸ்சனாவும்
சிறந்த கோல்காப்பாளராக மகாஜனாகல்லூரியை சேர்ந்த சாளினியும்
தெரிவுசெய்யப்பட்டனர்.

Source: https://ibctamil.com/article/mahajana-champions-in-national-level-football-1780927253

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்