முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, தேவ்தத் படிக்கல்லின் அதிரடி 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 ஓட்டங்களின் உதவியுடன் 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், கேசர நுவன்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

165 ஓட்டங்களால் வெற்றி 

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி, சோனல் தினுஷவின் போராட்டமிக்க 100 ஓட்டங்கள் மற்றும் நிரோஷன் திக்வெல்லவின் 80 ஓட்டங்களின் சிறப்பான பங்களிப்பால் 79.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி | Team India Wins By 165 Runs

இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றுத் தந்தனர்.

இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்படி, இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, போட்டியின் ஐந்தாவது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சோனல் தினுஷ 84 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் மானவ் சுதார் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம், இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Source: https://ibctamil.com/article/team-india-wins-by-165-runs-1787127285

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.