முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த புதிய சாதனை

போர்த்துக்கல் கால்பந்து அணி தலைவரும் புகழ்பெற்ற வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றுமொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின.

போட்டியின் 6-வது நிமிடத்திலேயே போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். 39-வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

தனித்துவமான உலக சாதனை

இந்த கோலின் மூலம், கால்பந்து வரலாற்றிலேயே 6 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ரொனால்டோ தன்வசப்படுத்தியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த புதிய சாதனை | Fifa World Cup Ronaldo Breaks Messis World Record

இதற்கு முன்னதாக 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 ஆகிய ஐந்து உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே தன் வசம் வைத்திருந்தார்.

தற்போது 2026 உலகக்கோப்பையிலும் கோல் கணக்கை தொடங்கியதன் மூலம், தனது 20 ஆண்டுகால உலகக்கோப்பை பயணத்தில் புதிய சிகரத்தை அவர் எட்டியுள்ளார்.

மேலும், உலகக் கோப்பையில் போர்த்துக்கல் அணிக்காக அதிக கோல் அடித்த யூசிபியோவின் (Eusébio – 9 கோல்கள்) சாதனையை முறியடித்து, தனது 10-வது உலகக் கிண்ண கோலுடன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/fifa-world-cup-ronaldo-breaks-messis-world-record-1782270048

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்