முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா இ.போ.ச. சாலையில் பேருந்து சேவை முடக்கம் – பயணிகள் கடும் அவதி

வவுனியா இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச.) சாலையிலிருந்து இயக்கப்படும் பேருந்துச் சேவைகள் இன்று (13) காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் அரச ஊழியர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சாலையின் பொறியியல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று (12) பணிக்கு சமூகமளிக்காததால், பேருந்துகளை வழமையான முறையில் பராமரித்து சேவைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பாக நிலவி வரும் பிரச்சினையை முன்னிட்டு, பொறியியல் பிரிவு ஊழியர்கள் பணியைப் புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, இன்று திங்கட்கிழமை காலை முதல் பேருந்துச் சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

வாரத்தின் முதல் வேலைநாளாக இருப்பதால், பாடசாலை மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் மாற்று போக்குவரத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/bus-service-suspended-on-vavuniya-ipoc-road–passengers-face-severe-hardship-1783915531

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்