ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலுக்கு சவுதி அரேபியா (Saudi Arabia) கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் கடந்த 1ம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவிடம் (United States) இருந்து பெறப்பட்ட அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இராணுவ இலக்கு
இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல், இராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளதாவது, “இஸ்ரேலிய நாட்டின் தாக்குதலுக்கு எங்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்.
கூட்டு இராணுவப் பயிற்சி
மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில். உறுதியான நிலைப்பாட்டை நாடுகள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதேவேளை, சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ,இராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.