முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய இளம் பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 55 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

பெண் கைது

குறித்த பெண் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய இளம் பெண் | Women Arrested In Katunayake Airport Today

இந்நிலையில் இன்று அதிகாலை டுபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது, ​​இந்த சிகரெட் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிணையில் விடுதலை

36,800 சிகரெட்டுகள் அடங்கிய 184 பெட்டி சிகரெட்டுகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய இளம் பெண் | Women Arrested In Katunayake Airport Today

கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 2ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.  

Source: https://tamilwin.com/article/women-arrested-in-katunayake-airport-today-1727663657

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்