ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (21) காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தின் போது, தொழிற்சாலையில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்புப் பிரிவினரின் கடும் முயற்சியின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தீக்குள் சிக்கியுள்ளவர்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீயை கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மற்றும் தெஹிவளை நகர சபைகளிலிருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொழிற்சாலைக்குள் மேலும் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியும் நோக்கில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

