முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ. எல்.பீரிஸ் போன்றோரை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது: ரணில் சாடல்

ஜீ. எல்.பீரிஸ்,நாளக கொடஹேவா, டலஸ் அலகப்பெரும போன்றவர்களை பலப்படுத்தும் கட்சியினரை எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் என்று சொல்லிக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி என்ற வகையில் கட்சியின் முன்னாள் தலைவர்களும் நாமும் உண்மையை மட்டுமே மக்களுக்கு சொல்வோம்.  

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

ஐக்கிய தேசிய கட்சி 

ஜீ. எல்.பீரிஸ் போன்றோரை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது: ரணில் சாடல் | Unp Will Not Support The Likes Of G L Peiris

கடந்த தேர்தல் காலத்திலும் நான் இந்த நாடு வங்குரோத்து அடையப்போகிறது என்ற உண்மையை முன்கூட்டியே மக்களுக்குச் சொன்னேன்.

நாடு நெருக்கடியிலிருந்து மீள 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்பதையும் சொன்னேன்.

எம்மிடம் திட்டம் ஒன்றுமில்லை என்று எதிர்த்தரப்பினர் அன்று விமர்ச்சித்தனர். அதனால் நாம் தோற்றுப்போனோம்.

அப்போது சிலர் உண்மை கூறி தோற்பதற்கு பதிலாக பொய் சொல்லி வென்றிருக்கலாம் என்று கூறினார்கள்.

18 நாடுகளின் உதவி

ஆனால் எமது கொள்கையில் மாற்றமில்லை. எவ்வாறாயினும் நாம் அன்று கூறியவாறு நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தேவையான நிதியை தேடிக்கொண்டிருக்கிறோம். ஐஎம்எப் மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளின் உதவியுடன் 16 பில்லியன் அமெரிக்க டொலர்களை தேடிக்கொண்டுள்ளோம்.

ஜீ. எல்.பீரிஸ் போன்றோரை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது: ரணில் சாடல் | Unp Will Not Support The Likes Of G L Peiris

தற்போது ஐஎம்எப் எமக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதனால் மக்களுக்கு சேவை செய்வதற்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்காகவே விருப்பம் இல்லாமலேனும் வற் வரியை அதிகரித்தோம்.

அதனை செய்ததாலேயே நாட்டில் பணவீக்கம் குறைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்து. அதன் பலனாக பொருளாதாரம் நிலைதன்மையை அடைந்தது.

இன்று முன்னோக்கி செல்கிறோம்.

அதேபோல் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம்.

பயனாளர்களின் எண்ணிக்கை

நிவாரணம் பெறும் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளோம். சமூர்த்தி போன்று மூன்று மடங்கு நிவாரணம் இன்று கிடைக்கிறது.

ஜீ. எல்.பீரிஸ் போன்றோரை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காது: ரணில் சாடல் | Unp Will Not Support The Likes Of G L Peiris

பின்னர் உறுமய திட்டத்தில் காணி உறுதிகயை வழங்குகிறோம். அரச ஊழியர்களுக்கு சம்பளம், வாழ்வாதார கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.

அடுத்த வருடத்திற்கான சம்பள அதிகரிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உரத் தட்டுபாட்டையும் போக்கினோம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.