முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ். மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் 188
புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த
யாழ்ப்பாண மாணவன் சு. சபின் பெருமையுடன் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – மல்லாகம், தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில்
கல்வி கற்கும் மாணவனான சு. சபின், அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம்
முதலிடத்தைப் பெற்று தனது பாடசாலைக்கும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை
சேர்த்துள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்.. 

சிறுவயதிலேயே தேசிய மட்டத்தில் உயரிய சாதனையைப் பதிவு செய்துள்ள மாணவனை
வாழ்த்தும் வகையில், தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையிலானோர் பாடசாலைக்கு நேரில் சென்றனர்.

இதன்போது இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி
அதிகாரிகளும் இணைந்து மாணவனை வாழ்த்தி கெளரவித்தனர்.

தமிழ்மொழி மூலம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணத்தின்
கல்வித் துறைக்கு புதிய பெருமை சேர்த்துள்ள மாணவன் சு. சபினுக்கு பல்வேறு
தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

Source: https://tamilwin.com/article/national-1st-place-scholarship-exam-tamil-language-1788419017

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்