முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.மாவட்ட கல்வி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் மத்திய அமைச்சின் மட்டத்திற்கு கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில்,  நேற்றைய
தினம்(14.07.2026) மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

கல்வி தொடர்பான பிரச்சினை

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

யாழ்.மாவட்ட கல்வி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட நடவடிக்கை | Jaffna District Education Development Projects

“பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வழி நடத்தலின் கீழ்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டு
கல்வி உபகுழுக் கூட்டங்களை நடாத்தி மாவட்டத்தில் கல்வி தொடர்பாக
எதிர்நோக்கும் சவால்களை ஆராய்ந்து முன்னிலைப்படுத்துவதற்காக இக்கூட்டம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில்15 பிரதேச
செயலகங்களிலும் 05 கல்வி வலயங்களிலும் கல்வி தொடர்பான பிரச்சினைகளை
ஆராய்வதுடன் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதுடன் ஏனைய பிரச்சினைகளை
மத்திய அமைச்சின் மட்டத்திற்கு கொண்டு செல்வதும் இதன் நோக்காகும்.

மேலும் வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி இல்லாமல் காணப்படும் பாடசாலைகளை
அபிவிருத்தி செய்தல், ஆளணி பற்றாக்குறை போன்றன காணப்படுவதாகவும் அதனை
தீர்ப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

கல்வி சீர்திருத்தங்கள்

கல்விப் பெறுபேறுகளில் கடந்தகால யுத்த அசாதாரண
நிலைமைகள் தாக்கம் செலுத்துவதாகவும் தாயை இழந்த, தந்தையை இழந்த, பெற்றோரை
இழந்து அநாதை இல்லங்களில் பிள்ளைகள் காணப்படுகின்றனர். கல்வியில் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை ஆராய்ந்து முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும்.

யாழ்.மாவட்ட கல்வி அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட நடவடிக்கை | Jaffna District Education Development Projects

இது தொடர்பில் கல்வி
அமைச்சினால் மேற்கொள்ளப்படும் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான
கருத்துக்களை முன்வைக்கவும்.

மேலும், குறைவான மாணவர்களை
கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைத்தல், கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கல்வி
அமைச்சினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான பொறிமுறையை வகுத்தல், வட
மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றம், கஸ்ட அதிகஸ்ட பிரதேசங்கள், உள்ளிட்ட
விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும்” என்றார்.

Source: https://ibctamil.com/article/jaffna-district-education-development-projects-1784099740

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.