முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்நினோ தாக்கம் தீவிரம் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந. பிரதீபராஜா கோரிக்கை

பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா, இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

செயலமர்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத் தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக அவர் கூறுகையில் மத்திய பசுபிக் பிராந்தியக் கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது.

அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது உருவாக்கும்.

மற்றும் வறட்சியும் மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.

 அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.

“எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டோரை கேட்டு நின்றார் 

இவ் நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின் முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/professor-n-pradeeparaja-requests-for-economical-use-of-water-due-to-the-intensity-of-the-el-nino-impact-1784972933

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.