முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் நிலவும் 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி விசேட அறிவித்தல் எண் 2497-ன் படி, 177 துணை பொலிஸ் பரிசோதகர் (Sub-Inspector) பதவிகளுக்கும், 206 பொலிஸ் கான்ஸ்டபிள் (Police Constable) பதவிகளுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

 விண்ணப்பங்கள்

அதற்கான விண்ணப்பங்கள் 2026 ஒகஸ்ட் 14 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் இணையவழி (Online) முறையில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் | Web Editors Makeup Artists Police Offers 383 Jobs

துணை பொலிஸ் பரிசோதகர் பதவிகளுக்காக இணையத்தள வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, முறைமை பகுப்பாய்வு (Systems Analysis), நிரலாக்கம் (Programming), கணினி வன்பொருள் மற்றும் வலையமைப்பு, கிராபிக் வடிவமைப்பு, அளவையியல் (Quantity Surveying), இயந்திரவியல், உணவு வழங்கல் (Catering) மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், மருந்தாளர், மின்சார வரைதொழில்நுட்ப நிபுணர் (Electrical Draftsman), மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தாதியர் (Nurse) ஆகிய பதவிகளுக்கும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்புகள்

அதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்காக குளிர்சாதன மற்றும் காற்றோட்ட தொழில்நுட்ப நிபுணர், சாரதி, மின்னணு தொழில்நுட்ப நிபுணர், இயந்திர நிபுணர், கணினி இயக்குநர், வெல்டிங் தொழில்நுட்ப நிபுணர், ஒலியமைப்பு இயக்குநர் மற்றும் மேடை ஒளியமைப்பு தொழில்நுட்ப நிபுணர் உள்ளிட்ட பல தொழில்நுட்ப துறைகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

இலங்கை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் | Web Editors Makeup Artists Police Offers 383 Jobs

மேலும், ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் ஒப்பனை கலைஞர் (Makeup Artist) மற்றும் உடற்தகுதி பயிற்றுநர் (Fitness Instructor) பதவிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், 2026 ஒகஸ்ட் 14 ஆம் திகதிக்கு முன்னர் இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Gallery

Source: https://tamilwin.com/article/web-editors-makeup-artists-police-offers-383-jobs-1785048273

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.