2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (07) முதல் ஆரம்பமாகின்றது.
அதன்படி, பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்னர், நாடு முழுவதும் உள்ள பாடசாலை வளாகங்களில் நேற்று (06) தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 4 ஆம் திகதி வரை தொடரும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
இந்தநிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ்மொழி மாணவர்களுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நிறைவடைந்ததுடன் முஸ்லிம் பாடசாலைகளின் முதல் கட்டம் செப்டம்பர் 02 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
அத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற நிலையில் 372,310 பரீட்சாத்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/2nd-phase-of-third-term-for-schools-begins-today-1788749730

