முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டெங்கு தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும். எவ்வாறாயினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெங்கு நோய்க்கான தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் ஏற்படுவதற்கு முன்னர் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இதுவொரு புதிய தடுப்பூசி என்பதால், நோய் தடுப்பில் இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தற்போது கூறுவது கடினம்.

இருப்பினும், பல நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. எனவே, இலங்கைக்கு இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/health-ministry-takes-steps-to-get-dengue-vaccine-for-sri-lanka-1785140684

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்