முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல்

தொலைதூர மோதல் ஒன்றின் தாக்கம் காரணமாக எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மாசாடோ காண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் அடங்குகின்றது.

இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி! | Adb Extends Usd 200 Million To Help Sri Lanka

இதன் கீழ் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு,நடுத்தர அளவிலான தொழில்துறைகளின் போட்டித்தன்மையை உயர்த்துதல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகப் பல சீர்திருத்தங்கள் மேற்கொளளப்படவுள்ளன.

இச்சீர்திருத்தங்கள் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாஹிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இலங்கை பொருளாதாரம் சிறப்பாக முகங்கொடுக்கும் திறன் வலுவடையும் என ADB சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/adb-extends-usd-200-million-to-help-sri-lanka-1785473252

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.