2026 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அம்மாத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆகும். இது கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன்ப்பிடுகையில் 1.7% வீழ்ச்சியாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புதிய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 44,547 (26%) ஆகும்.
மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 21,834 பேரும், நெதர்லாந்திலிருந்து 12,493 பேரும், சீனாவிலிருந்து 12,336 பேரும், பிரான்ஸிலிருந்து 10,102 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரை நாட்டிற்கு வருகை தந்த ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,343,418 ஆகப் பதிவாகியுள்ளது.
Source: https://samugammedia.com/17-drop-in-the-number-of-tourists-visiting-sri-lanka-in-july-1785820291

