முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 504 பேர் முகாம்களில் தங்க வைப்பு! நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2,112 குடும்பங்களைச் சேர்ந்த 8,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கூன் தெரிவித்துள்ளார்.

நேற்று (06) பிற்பகல் நிலவரப்படி, ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், 152 குடும்பங்களைச் சேர்ந்த 504 பேர் 18 தற்காலிக தங்குமிடங்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் 11 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையுடன் கூடிய பலத்த காற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. மவுசாக்கலை நீர்த்தேக்கம் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

மேலும், கென்யோன், புரொட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி மதகுகள் ஊடாக வெளியேறி வருகின்றது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் நிலை ஏற்பட்டால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/natural-life-affected-in-nuwara-eliya-504-people-accommodated-in-camps-danger-as-reservoirs-overflow-1786079259

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.