முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பலத்த காற்றுடன் சீறும் அலைகள்; கடலுக்கு செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, மறுஅறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்படுகின்றது. 

மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக் கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. 

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகளை அவதானிப்பில் கொள்ளுமாறு கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேவேளை சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Source: https://samugammedia.com/waves-crashing-with-strong-winds-do-not-go-to-the-sea-red-alert-for-fishermen-1786254593

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.