முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதவியேற்கும் நிலையில் சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் : நீதி மன்றம் பிறப்பிக்க போகும் தீர்ப்பு

நடிகை ஒருவருடனான தவறான தொடர்பை மறைக்க, அவருக்கு ட்ரம்ப் (Donald Trump)  தரப்பில் பணம் கொடுத்தது தொடர்பிலான வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ள விடயம் தற்போது சர்வதேச பரப்பில் பேசுப்பொருளாகியுள்ளது.

மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ட்ரம்ப், இது தன் மீதான சட்டவிரோத அரசியல் தாக்குதல் எனவும் விமர்சித்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் மலும் தெரியவருவதாது, 2016ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களின்போது, தவறான படங்களில் நடிக்கும் நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் என்னும் இளம்பெண்ணுடன் ட்ரம்புக்கு தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

போலியான ஆவணங்கள்

இந்நிலையில் குறித்த விடயத்தை மறைக்க அந்தப் பெண்ணிற்கு 130,000 டொலர்கள் பணம் கொடுக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதவியேற்கும் நிலையில் சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் : நீதி மன்றம் பிறப்பிக்க போகும் தீர்ப்பு | Judge Orders Ruling Actress Cas Trump Go To Jail

உண்மையில் அப்படி பணம் கொடுப்பது அமெரிக்கச் (United States) சட்டப்படி குற்றமில்லை என்றாலும், அந்த விடயத்தை மறைப்பதற்காக, அது தொடர்பான போலியான ஆவணங்களை ட்ரம்ப் உருவாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.   

வெள்ளை மாளிகை

இந்நிலையில், இம்மாதம் 20ஆம் திகதி ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், சரியாக அதற்கு 10 நாட்களுக்கு முன், அதாவது, ஜனவரி மாதம் 10ஆம் திகதி, அந்த வழக்கில் தீர்ப்பளிக்க Juan Merchan என்னும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பதவியேற்கும் நிலையில் சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் : நீதி மன்றம் பிறப்பிக்க போகும் தீர்ப்பு | Judge Orders Ruling Actress Cas Trump Go To Jail

ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ இருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கில் ட்ரம்ப் சிறை செல்லப்போவதில்லை என்றாலும், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவராகத்தான் அவர் வெள்ளை மாளிகைக்குள் (The White House) செல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்