2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இன்று காலை(10.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 20 முதல் 25 வரை ..
2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை ஆகஸ்ட் 20 முதல் 25 வரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 தேர்வு மையங்களில் நேற்று(09) இடம்பெற்றது.
இந்த பரீட்சையில் 94,089 மாணவர்கள் பங்கேற்றதாகவும், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் பரீட்சை எழுதியுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Source: https://tamilwin.com/article/results-of-scholarship-exam-1786345408

