“தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” வேலைத்திட்டத்தின் கீழ், 214D வைரவப்புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குட்செட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சிரமதானப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சுமார் 6 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இச்சிரமதானப் பணியில் அப்பகுதி கிராம மக்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள், அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றினர்.
குட்செட் வீதி, கிராமத்தின் பொது இடங்கள், வீதியோரங்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காணப்பட்ட கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன.
ஒன்றிணைந்து செயல்படுவோம் – டெங்கு ஒழிப்போம் – பாத்தினியத்தினை அகற்றுவோம்” என்ற கருப்பொருளின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெற்ற இச்சிரமதானப் பணி, பசுமையான மற்றும் ஆரோக்கியமான கிராமத்தை உருவாக்குவதற்கான சிறந்த சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, எல்லைக்குட்பட்ட ஏனைய பகுதிகளிலும் மேலதிக சிரமதான நிகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
Source: https://samugammedia.com/major-cleaning-operation-completed-on-vavuniya-goodchet-road-1786375388

