முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு!

சுவிட்சர்லாந்தின் – ஜெனீவாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நாட்டின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு நடமாடும் சேவை ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ‘Haus Der Religionen, Europaplatz 1, 3008 Bern’ என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

வழங்கப்படவுள்ள சேவைகள் 

இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள், இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.

சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு! | Srilankan Consulate To Hold Mobile Service In Bern

அத்துடன் e-BMD தொகுதியின் ஊடாகப் பெறப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், சிவில் நிலை உறுதிமொழிப் பத்திரங்களைச் சான்றளித்தல், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்களைச் சான்றளித்தல் ஆகிய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.

தேவையான விபரங்கள்

கால அவகாசம் குறைவாக உள்ளமையினால், இந்தச் சேவைகளைப் பெற விரும்புபவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் www.lankamission.org/mcs என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு! | Srilankan Consulate To Hold Mobile Service In Bern

மேலும், தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்களை www.lankamission.org/checklist என்ற முகவரியில் அறிந்துகொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக விசாரணைகளுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +41 77 990 6073, +41 77 909 8969 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும் என ஜெனீவாவிலுள்ள இலங்கை துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

you may like this

https://www.youtube.com/embed/u9zfHVtj19g

Source: https://ibctamil.com/article/srilankan-consulate-to-hold-mobile-service-in-bern-1786433266

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.