பெல்லன்வில எசல மகா பெரஹெராவை முன்னிட்டு பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவில் பல்வேறு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நாளை (13) காலை 7 மணி முதல் 10 மணி வரை பவாட பெரஹெரா நடைபெறவுள்ளதால், பொரலஸ்கமுவ சந்திப்பிலிருந்து பெலந்தர சந்திப்பு வரையான 119ஆம் பேருந்து வழித்தடத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மஹரகம மற்றும் பிலியந்தலவிலிருந்து தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பெப்பிலியான சந்திப்பு மற்றும் நெடிமலை ஊடாக பயணிக்க முடியும். வேரஹேராவிலிருந்து காலி வீதி நோக்கிச் செல்லும் வாகனங்கள் கங்காராம வீதி வழியாக மாற்றி அனுப்பப்படவுள்ளன.
எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 8 மணி முதல் 15ஆம் திகதி அதிகாலை 2 மணி வரை ரன்சீவலி பெரஹெரா நடைபெறவுள்ளது.
இதன்போது பெலந்தர சந்திப்பு, சோமரத்ன மாவத்த மற்றும் விகார மாவத்த ஊடான 119ஆம் பேருந்து வழித்தடத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
இலகுரக வாகனங்கள் 117ஆம் வழித்தடத்தையும், கனரக வாகனங்கள் பெப்பிலியான மற்றும் பிலியந்தல சந்திப்புகள் ஊடான மாற்றுப் பாதைகளையும் பயன்படுத்த முடியும்.
எதிர்வரும் 15ஆம் திகதி இரவு 8 மணி முதல் 16ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ரந்தோலி மகா பெரஹெரா நடைபெறவுள்ளது.
இதன்போது பொரலஸ்கமுவ, பெலந்தர மற்றும் நெடிமலை சந்திப்புகளிலும், அட்டிடிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி சந்திப்பிலிருந்து பெப்பிலியான சந்திப்பு வரையான 117ஆம் வழித்தடத்திலும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.
மஹரகம மற்றும் பிலியந்தலவிலிருந்து தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனங்கள் கொஹுவளை–களுபோவில வீதியைப் பயன்படுத்துமாறும், மவுண்ட் லவினியா மற்றும் இரத்மலானையிலிருந்து மகரகம நோக்கிச் செல்லும் வாகனங்கள் அட்டிடிய பேக்கரி சந்திப்பு மற்றும் தெஹிவளை ஊடாக மாற்றுப்பாதையில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹொரணை, பிலியந்தலை, கெஸ்பேவ மற்றும் மஹரகம பகுதிகளிலிருந்து காலி வீதி நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் கொஹுவளை – களுபோவில வீதியைப் பயன்படுத்த வேண்டும் எனவும், கொழும்பு நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பிலியந்தலை சந்திப்பு மற்றும் கட்டுபெத்த வீதி ஊடாக செல்ல வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் அமுல்படுத்தப்படும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Source: https://samugammedia.com/kandy-esala-perahera-special-traffic-restrictions-in-colombo-1786515344

