பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு (Galagoda Aththe Gnanasara Thero) 09 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன (Pasan Amarasena) சிறைத்தண்டனையுடன் 1,500 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.
சிறைத் தண்டனை
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனையை விதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஞானசார தேரர் கடந்த மாதம் 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் முன்னிலையாகாததால் அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்றைய தினமான ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.