முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நயினாதீவு அருகே கவிழ்ந்த படகு; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 10 பயணிகள்!

யாழ்ப்பாணம் – குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறிய ரகப் படகு ஒன்று நயினாதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று மாலை பிரதான படகு சேவை நிறைவடைந்ததால், காத்திருந்த 10 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக படகு மாலை ‘ஐயனார் முடக்கு’ பகுதி அருகே கவிழ்ந்தது.

கடற்படையினர், நயினாதீவு மீனவர்கள் மற்றும் நெடுந்தீவு மக்களின் துரித முயற்சியால் படகில் 

இருந்த 10 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அவர்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்பயணங்களை தவிர்க்குமாறு முன்னதாகவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் இந்த படகின் ஊடாக அவர்கள் பயணித்திருந்ததாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

தகவல் அறிந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதுடன், படகில் பாதுகாப்பு அங்கிகள் (Life Jackets) இருந்தனவா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா

என்பது குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/boat-capsizes-near-nainathivu-10-passengers-miraculously-survive-1786942226

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்